கொரோனா தடுப்பு பணிக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஒருநாள் சம்பளம் பிடித்தம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்க உள்ளதாக தலைமை செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்க உள்ளதாக தலைமை செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து அதை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
