இந்தியா

கேரள முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்றார் பினராயி விஜயன்!

கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் புதிதாக பதவி ஏற்க இருக்கும் அமைச்சர்கள் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-அமைச்சராக 2வது முறையாக பினராயி விஜயன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து பினராயி விஜயன் தலைமையில் அமையும் புதிய அமைச்சர் சபையில் உள்ள 21 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.