தமிழகத்தை உலுக்கும் கொரோனா,பட்டியலில் முதலிடம் தமிழகம், வரிசையில் தொடர்கிறது கேரளா….
தமிழகத்தில் மேலும் 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ,அதன் காரணமாக கொரோணா பாதிப்பில் முதலிடம் தமிழ்நாடு.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்தாலும் பாதிப்பு குறையவில்லை. மாறாக அதிகரித்து வருகின்ற அவல நிலை ஏறபட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 34,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு.
இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 16 லட்சத்து 99 ஆயிரத்து 225 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 2 லட்சத்து 53 ஆயிரத்து 576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில்14 லட்சத்து 26 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மேலும் 23 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை
கொரோனா பாதிப்பு காரணமாக, நாளில் 365 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது.
பட்டியலில் பின் தொடர்ந்து வரும் கேரளா இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 762 பேராக உயர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ள்து.
