இறந்த பிறகு டோஸ் அளிக்குமா மத்திய அரசு!…நடிகர் சித்தார்த் அதிரடி ட்வீட்
நடிகர் சித்தார்த் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை சமூக வளைத்தலங்களில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை உண்டாக்கி வருகிறார். மத்திய அரசின் கொள்கைகள் ,புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார் நடிகர் சித்தார்த். இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை விவகாரத்தை, சித்தார்த் ட்விட்டரின் மூலம் கருத்து தெரிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற இயலாமையை குறித்து சுட்டிக்காட்டும் வகையில் நடிகர் சித்தார்த் கருத்து வெளியிட்டுள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் நாடே திணருவதற்கு மத்திய அரசின் அலட்சியமும் ஒரு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படும் நிலையில், இரண்டாவது அலை தீவிரமாக உள்ளதன் காரணமாக தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு முடுக்கியுள்ளது. ஆனால் நாட்டின் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருவதால் பல மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மேலும்,முதல் டோஸ் செலுத்தி கொண்டவர்கள் தங்களது இரண்டாவது டோஸை பெற வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இதன் இடையே நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், இறந்து 8-12 வாரங்களுக்குப் பிறகு மக்கள் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெறுவார்களா? என்று மத்திய அரசுக்கு எதிராக கடும் கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசுக்கு எதிரான நடிகர் சித்தார்த்தின் ட்வீட், வழக்கம் போலவே பாஜக ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. நடிகர் சித்தார்த்தின் இந்த ட்வீட் பல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்தியாவில் வரும் ஜனவரியின் துவக்கத்தில் தொடங்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசி இயக்கம் விரைந்து செயலாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது, இந்த நிலையில் தடுமாற்றத்திற்கு ஆளானது. திடீரென தாக்கிய இரண்டாம் அலையில் சிக்கி மக்கள் அவதிப்பட்டுகின்ற நிலையில், தடுப்பூசி குறைபாட்டால், கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பணி தோல்வியை சந்தித்துள்ளது. தொற்று நோய் அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது. பல மாநிலங்கள் 18-45 வயதினருக்கும் தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களை ஒத்தி வைத்துள்ளது.
சமீப அறிக்கையின் படி கடந்த 5 மாதங்களில் சுமார் 28.9 மில்லியன் பேர் மட்டுமே தடுப்பூசியின் 2 டோஸ்களையும் முழுமையாக பெற்றுள்ளனர். சுமார் 200 மில்லியன் மக்கள் தங்களது இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் சித்தார்த் எழுப்பியுள்ள கேள்விக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
