வெப் சீரியஸை வெளியிட்டால் போராட்டம் வெடிக்கும்,வைக்கோ அறிக்கை… அப்படி என்ன இருக்கிறது அந்த கதையில்..?
தி பேமிலி மேன் 2 என்ற இந்தி வெப் தொடரை தடை செய்க வேண்டும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
சமந்தா, மனோஜ் பாஜ்பாய் நடித்து உள்ள தி பேமிலி மேன் வெப் சீரிஸின் ட்ரெய்லர் மே 19-ம் தேதி வெளியானது. 2019-ல் வெளிவந்த முதல் சீசன் பெரிய ஹிட் அடித்ததால் இரண்டாவது சீசன் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. வரும் ஜூன் 4-ம் தேதி இந்த வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. இந்த தொடரின் டிரெய்லர் கடந்த 18-ம் தேதி வெளியானது. இதில் இலங்கை தமிழர்களை பயங்காரவதிகளாக காண்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தி பேமிலி மேன் 2 வெப் தொடரை தடை செய்ய வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், தமிழர்களை பயங்கரவாதிகள் ஆகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து இருக்கிறார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை இழந்த ஈழப் போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர்.
ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகக் காட்சிகள் இருக்கின்றன. இத்தகைய காட்சிகளைக் கொண்ட இந்தத் தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது என்றும் தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. எனவே இந்தத் தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. மேலும் அமேசான் ஓடிடி தளத்தில் இந்தத் தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் என வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
