அரசியல்தமிழ்நாடு

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய் என நிரூபிப்பேன்…

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சுமார் 6 கோடி ரூபாய் வரை பணம் வாங்கி மோசடி செய்ததாக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிமுக அமைச்சர் நிலோபர் கபீல் மீது பணம் மோசடி புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அவரது உதவியாளர் பிரகாசம், டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொருப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இவரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி அதிமுக அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் கழகத்தின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு கழங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் நிலோபர் கபீலை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பியுள்ள நிலோபர் கபீல் ,என் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பிரகாசம் அவரது பணியை தவறாக
பயன்படுத்தி என் மீது தவறாக புகார் அளித்துள்ளார். அவை தவறானது என்பதை விரைவில் நான் நிரூபிப் பேன்’ எனக் கூறியுள்ளார்.