தமிழ்நாடு

அசத்தும் மு.க.ஸ்டாலின் ..! சென்னையில் ரூ. 12 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் !

சென்னை கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் இயங்கி வரும் அரசு புறநகர் மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இதனையடுத்து, ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 100 படுக்கைகளை, பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் மருத்துவமனை அதிகாரிகளுடன் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வின் போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.