அரசியல்தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யத்தின் மூன்று புதிய கொள்கைகள்

மக்கள் நீதி மய்யம் சார்பில் மூன்று புதிய கொள்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேம்படுத்தப்பட்ட சமூகநீதி, அனைவருக்குமான அரசியல் நீதி, நிலையான பொருளாதார நீதி ஆகிய மூன்று கொள்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மூன்று கொள்கைகளையும் கட்சியின் தொண்டர்கள் நிச்சயமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு சில தலைமைக்குழு நிர்வாகிகளின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, அண்மையில் கமலஹாசன் வெளியிட்டிருந்த அறிக்கையில் உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை விரைவில் காண்பீர்கள் என தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது..