கைலாசா மீது ‘பயோவார்’?! தீவிரவாத கும்பல் சூழ்ச்சி: நித்யானந்தா
கைலாசா நாட்டின் மீது தீவிரவாத கும்பல் ஒன்று ‘பயோவார்’ தொடுத்திருப்பதாக நித்யானந்தா அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
பாலியல் புகார் தொடர்பான குற்றச்சாட்டில் நாட்டைவிட்டு வெளியேறி கைலசா நாட்டை உருவாக்கி உள்ளதாக நித்தியானந்தா கூறிவரும் நிலையில், தற்போது அந்த நாட்டுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தீவிரவாத அமைப்புகள் கைலாசாவுக்கு ஊடுருவ முயற்சிப்பதாகவும், நாங்கள் கேட்காத விதைகளை மர்ம நபர்கள் அனுப்பியுள்ளதாக இது ஒரு பயோவார் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை விதைகள் மூலம் அனுப்பும் கொடிய சதி நடப்பதாக மிக சீரியசாக கூறும் நித்யானந்தாவின் வெப்சைட்டில் எங்குவே அவரது விலாசம் காணப்படவில்லை. எனவே எப்படி விதைகளை அனுப்பினார்கள் என்பது கேள்வியாக உள்ளது. அண்மையில், கைலாசா மீது, அமெரிக்கா பயோவார் தொடுப்பதாக கூறப்பட்டது. ஆனா அது சில நாட்களிலேயே பொய்யாகி போனது அனைவருக்கும் தெரிந்தது. அதேபோல் இதுவும் கூட பொய்யாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
