சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு…
சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கில் அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் ஆசிரியைகளை வரவழைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா மீதான 3 வழக்குகளிலும் 30 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனரான சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து முன்னாள் மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் சிவசங்கர்பாபா மீது 3 போக்சோ வழக்குகள் பதியப்பட்டன. இதில் 2 வழக்குகளில் சிவசங்கர்பாபா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3-வது வழக்கிலும் அவரை கைதுசெய்ய சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.
மூன்று வழக்குகளையும் வலுவான ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் கொண்டு செல்லவும், அது தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல செய்வதற்கும் சிபிசிஐடி ஈடுபட்டுள்ளது. சிவசங்கர் பாபாவிடம்பெற்ற வாக்குமூலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சில ஆசிரியர்களிடமும வாக்குமூலம் பெறப்பட்டது.
தற்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் அவர்களுடன் படித்த மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தற்போது சாட்சியங்களா வருவதற்கும் அவர்கள் முன் வந்துள்ளதாக சிபிசிஐடி தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரிக்கவும் சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.