தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு… சென்னை வானிலை மையம் அறிவிப்பு…
தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை, தேனி சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 24 மணி நேரங்களில் கனமழை பெய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, ஒருசில உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தர்மபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. 18 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சிமலையையொட்டியுள்ள நிலகிரி, கோவை, தேனி திண்டுக்க்ல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் கனமழை வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்க கடல் பகுதியில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதாலும், மத்திய வங்க கடல் பகதியில் பலத்த காற்று விசக் கூடும் என்பதாலும் மீனவர்கள் அந்த பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.