அரசியல்தமிழ்நாடு

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அரசின் மருத்துவ சேவைகள் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சாமனப்பள்ளி கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்கீழ் உயர் ரத்த அழுத்தம், காசநோய், பல வகை புற்றுநோய்கள், நீரிழிவு, சிறுநீரக பிரச்சனை உள்பட அனைவருக்கும் இத்திட்டத்தின்கீழ் பலன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் பல்வேறு காரணங்களால் முறையான தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. எனவே நோயாளிகள் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு தேவையான சிகிச்சை, மருந்து மாத்திரை வழங்குது, டயாலிசிஸ் தேவைப்படுவோருக்கு கையடக்க கருவி மூலம் சிகிச்சை அளிப்பது? பிசியோதெரபி சிகிச்சை அளிப்பது, உள்ளிட்ட பல்வேற சிகிச்சைகள் அளிப்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சரோஜா என்பவரது இல்லத்திற்கு சென்று மருந்து மாத்திரைகளை வழங்கினார்.

பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சந்திரசேகரின் இல்லத்திற்கு சென்று அவருக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினார். இதேபோல் மூக்கனூரைச் சேர்ந்த கால்கள் இழந்து இரண்டு பேருக்கு முதலமைச்சர் செயற்கை கால்களை வழங்கினார். கிருஷ்ணகிரியைத் தொடர்ந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், மற்ற மாவட்டங்களில் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.