உக்ரைன் vs ரஷ்யா : ரஷியா மீது மேலும் பல பொருளாதார தடைகள்..! அமெரிக்கா, ஐரோப்பா அதிரடி முடிவு
உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்கத்தில் நடத்தி வருவதால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் ரஷ்யா தளராமல் போரை நீட்டித்து வருகிறது.
இந்த நிலையில் வரும் நாட்களில் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்கும், அவை எரிசக்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.
இதுபற்றி பிரான்ஸ் வெளியுறவுத்துறை செயலாளர் கிளமெண்ட் பியுன் அளித்த பேட்டியில், “ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகளை விதிப்பது பற்றி அமெரிக்கா மற்றும் முக்கியமான ஐரோப்பிய நாடுகள் இடையே விவாதிக்கப்பட்டது. வரும் நாட்களில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் பலப்படுத்தப்படும். இந்த கட்டுப்பாடுகள், எரிசக்தி வளங்களை அதிலும் குறிப்பாக எண்ணெய் வளத்தை பாதிக்கும்” என்று தெரிவித்தார்.