Covid19இந்தியா

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..! 3 ஆயிரத்தை நெருக்கிய தினசரி பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், கடந்த ஒருவார காலமாக அதன் எண்ணிக்கையானது ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்ததமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா 4ஆம் அலை ஜூன் மாதம் ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில் மக்கள், அலட்சியம் காட்டாமல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2,541 பேருக்கும், நேற்று 2,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 65ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.