அரசியல்தமிழ்நாடு

1150 ஏக்கர் பரப்பளவில் அமைய‌ இருக்கும் இந்தியாவின் முதல் சர்வதேச பர்னிச்சர் பூங்காவின் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் கனிமொழி எம்பி…

தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சிப்காட் வளாகத்தில் ரூபாய் 1000 கோடி மதிப்பில், 1150 ஏக்கர் பரப்பளவில் அமைய‌ இருக்கும் இந்தியாவின் முதல் சர்வதேச பர்னிச்சர் பூங்காவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில், இன்று (12/02/2023) ஞாயிற்றுக்கிழமை, அங்கு நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் கனிமொழி கருணாநிதி எம்பி . அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி – மடத்தூர் பகுதியில் புதிதாக அமைய இருக்கும் ESIC மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்ததையொட்டி அதனை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

உடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்