தமிழ்நாடு

திருவைகுண்டம் தடுப்பணை பகுதிகளில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்த கனிமொழி எம்.பி

தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை பகுதியில் உள்ள உறைகிணறுகள் மூலமாக ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்திற்காக தண்ணீர் அனுப்பப்பட்டு வரும் நிலையில், ஆற்றில் தற்போது தண்ணீர் குறைந்ததால் குறைந்த அளவு குடிநீரை விநியோகம் செய்யும் நிலை ஏற்பட்டு வந்தது.

இதை தொடர்ந்து, நீர்வளத் துறையின் மூலமாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து கூடுதலாக 380 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது உரைக் கிணறு பகுதிகளுக்கு வராத நிலை இருந்ததால், உறை கிணறு அருகே தண்ணீர் வரும் வகையில் புதிய கால்வாய் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Image

இந்த நிலையில், இன்று (26/06/2023) திங்கள்கிழமை, ஸ்ரீவைகுண்டம், பொன்னான்குறிச்சி, கடம்பாகுளம் நீர்வழிப் பாதையில் உள்ள பாலம் ஆகிய புதிதாக கால்வாய் ஆகிய பகுதிகளுக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்

Image

இந்நிகழ்வில் , மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் தாக்கரே‌ சுபம் ஞானதேவராவ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்