தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கனிமொழி எம்.பி திடீர் ஆய்வு..!!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் இன்று (16/11/2023) நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவில் விரதம் இருக்கக்கூடிய பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட தற்காலிக அரங்கத்தை ஆய்வு செய்து அங்கு தங்கி இருக்கக்கூடிய பக்தர்களிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார் கனிமொழி எம்பி .

இதையடுத்து திருச்செந்தூர் கோவில் சார்பாக தினசரி வழங்கப்படும் அன்னதானம் வழங்கக்கூடிய மண்டபத்தை பார்வையிட்டு அங்கு உணவு அருந்திய பக்தர்களிடமும் உணவின் தரத்தை குறித்தும் கேட்டறிந்தார் அதனைத் தொடர்ந்து அங்கு செயல்பட்டு வரும் தற்காலிக முதலுதவி சிகிச்சை மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வின்போது, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா இராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்