யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமின் வழங்கியது பூந்தமல்லி நீதிமன்றம்..!
பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் என்ற யூடியூபர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவிலை சீரமைப்பதற்கு இணையதளம் மூலம் நிதி திரட்டியதால். இந்துசமய அறநிலையத்துறையிடம் முறையாக அனுமதி பெறாமல் கோயில் பெயரை பயன்படுத்தி சுமார் 36 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக அக்கோவில் செயல் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 30 ஆம் தேதி காலை யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர்.
தொடர்ந்து யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் கோரி சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 1 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மனுவை விசாரித்த பூந்தமல்லி நீதிபதி பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
