இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி மருந்தை செலுத்த குவிந்த மக்கள்!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அந்த பரவலால் பல மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவில் அதிகமாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி மருந்தை செலுத்திக்கொள்ள வேண்டும் என அனைத்து தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 41 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 34 லட்சத்துக்கும் மேலானோர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனாவை அழிக்க தடுப்பூசி தான் ஒரே முயற்சி என்பதால் மக்கள் தடுப்பூசி மருந்து செலுத்தி கொள்வதற்கு முன் வருகின்றனர்.

அந்த வரிசையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரம் மும்மையில் மிகப் பெரிய அளவில் தடுப்பூசி செலுத்தும் வேலைகள் இன்று நடைபெற்றது. அதில் மக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.