அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கியது யார்…?
நடந்து முடிந்த தமிழக சட்டபேரவை தெர்தலில் அதிமுக ஆட்சி முடிவுற்ற நிலையில், அம்மா உணவகங்களின் பெயர் பலகைகளை சிலர் தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சட்டபேரவை தேர்தலில் திமுக 159 இடங்களில் வென்று 6-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7 ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். இதனிடையே அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் சென்னை ஜெ.ஜெ நகரில் உள்ள அம்மா உணவகத்தின் போர்டுகளை சிலர் தூக்கி எறிவது போன்றும், இனிமேல் இது அம்மா உணவகம் இல்லை என அவர்கள் கூறுவது போன்றும் சில காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. இது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது திமுகவினரின் கொலைவெறி தாக்குதல், அவர்கள் ஆட்சியில் இதுதான் நடக்கும் என அதிமுக தலைமைக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
