Covid19தமிழ்நாடு

அதிமுக செய்த ஊழல்களை பிறகு பார்ப்போம்…முதலில் மக்களை காப்பாற்றுவோம், மா.சுப்ரமணியன்

அதிமுக ஆட்சியில் செய்த ஊழல் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கு இது நேரம் இல்லை என்றும் ,கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதே எமது நோக்கமாக உள்ளது ,என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெறிவித்துள்ளார்.

மேலும் அவர் ,சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் பேருந்து, செஞ்சிலுவை சங்கம் சார்பில் வழங்கப்பட்ட மருந்து பொருட்களையும், மருத்துவ உபகரணங்களையும் பெற்றுக்கொண்டார்.

அதன்பிற்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் கார் ஆம்பூலன்ஸ் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதை, பிரதமர் பாராட்டியுள்ளார் என்றும் மேலும் இத்திட்டத்தை இந்தியாவின் மற்ற மாநகராட்சிகளும் பின்பற்றலாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் எனவும் கூறினார்.

அதைதொடர்ந்து அவர்,தொற்று எண்ணிக்கை குறைவதற்கு ஒரே வழி ஊரடங்குதான் என்று கூறினார். ஊரடங்கால் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளது என்றும், 7 முதல் 8 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் ,தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தீவிரமாக்கப்பட்டு, மருத்துவ வசதிகள் அதிகரிப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத்துரை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் அதிமுக ஆட்சியின் நடந்த ஊழல் குறித்து ஆராய வேண்டிய நேரம் இது இல்லை என்றும், கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதே முக்கியமான நோக்கம் என்றார்.