சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து Man Vs Wild நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபல நடிகர்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…
சிறியவர் முதல் பெரியவர் வரை உலக மக்கள் அனைவரும் தொடர்ந்து பார்க்கும் உலகப்புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று Man Vs Wild. டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை Bear Grylls என்பவர் தான் ஹீரோவாக முன் நின்று நடத்தி வருகிறார்.

இந்திய மட்டுமல்லாமல் எத்தனையோ பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர் . அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இவர் கலந்துகொண்ட எபிசோட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .
இந்நிலையில் தற்போது பிரபல முன்னணி பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் முதல் முறையாக Bear Grylls-உடன் இணைந்து Man Vs Wild நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் .
இந்த நிகழ்ச்சி வரும் ஜூலை 8ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளதால் இந்த நிகழ்ச்சியை காண, ரன்வீர் சிங்கின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

பொதுவாகவே நடிகர் ரன்வீர் சிங் மிகவும் தறுதுறுப்பான துடிப்பான ஒரு மனிதர் அவர் எந்த இடத்தில இருந்தாலும் அந்த இடம் நிச்சம் ஜாலியாகவும் கலாட்டாவாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகவும் இல்லை அந்த வகையில் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும் எந்தை நாம் காத்திருந்து பார்ப்போம் .
