அரசியல்தமிழ்நாடு

மாநகராட்சி ஆணையர் பணி இடமாற்றம்…கண்கலங்கிய தஞ்சை மேயர்..!!

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், கரூருக்கு பணி மாறுதல் பெற்று வழியனுப்பும் விழாவில், கண் கலங்கியபடி அவரை அனுப்பி வைத்த தஞ்சாவூர் மேயர் ராமநாதன் – மாமன்றத்தில் இருந்தோரை கண்கலங்க வைத்துள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் கரூருக்கு பணிமாறுதல் பெற்று செல்லவுள்ள நிலையில் அவருக்கு நடந்த ஃபேர்வெல் விழாவில் கண்கலங்கி அழுதபடி பிரியாவிடை கொடுத்து அனுப்பியுள்ளார் தஞ்சை மேயர் சன்.ராமநாதன்.

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமாரை பொறுத்தவரை ரொம்ப ஸ்டிரிக்டான அதிகாரி என்ற பெயர் எடுத்தவராம் . ஒப்பந்தப்பணிகள் உட்பட மாநகராட்சி கடை வாடகை வரை மிகவும் ஸ்ட்ரிக்டாக இருந்தவர். இப்படிப்பட்ட ஒரு அதிகாரி வேரு ஊருக்கு செல்கிறார் என்றால் அந்த ஊரைச் சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் கொண்டாடுவது தான் வழக்கம். ஆனால் தஞ்சையில் நடந்திருப்பதோ அதற்கு நேர் மாறானதாக இருந்தது. இதிலிருந்தே எந்தளவுக்கு வெளிப்படையான நிர்வாகத்தை தஞ்சை மேயர் சன்.ராமநாதன் கொடுத்திருக்கிறார் என்பது புரிய வருகிறது.

இதனிடையே இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சிறப்பு தகவல் என்னவென்றால் தமிழ்நாட்டிலேயே கடன் இல்லாத மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சியை மாற்றிய பெருமையும் ஆணையர் சரவணக்குமாருக்கு உண்டு. அண்மையில் கூட தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான கடைகளை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த ரூ.27 கோடியை மாநகராட்சி பெயரில் வைப்பு நிதியாக செலுத்தியிருக்கிறார் சரவணக்குமார். தஞ்சையை போலவே கரூர் மாநகராட்சியிலும் சரவணக்குமார் இன்னும் பல அதிரடிகளை அரங்கேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக இதுவரை பள்ளிக்கூடங்களில் இருந்து இடம் மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களை தான் மானவர்கள் பிரியாவிடை கொடுத்து அனுப்பியிருப்பதை பார்த்திருப்போம். முதல் முறையாக கறார் அதிகாரி ஒருவருக்கு அரசியல்வாதியான தஞ்சை மேயர் பிரியாவிடை கொடுத்து கண்கலங்கிய படி வழியனுப்பி வைத்ததை இப்போது தான் பார்க்கிறோம்.

மாநகராட்சி ஆனையராக சரவணக்குமார் தஞ்சையில் 2 ஆண்டுகள் 2 மாதம் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.