தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் பாதிப்பு – நிவாரணம் அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

  • மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ₹6,000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையாக ₹5,00,000 வழங்கப்படும்.
  • சேதமடைந்த குடிசைகளுக்கு ₹8,000 வழங்கப்படும்.
  • மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ₹17,000 வழங்கப்படும்.
  • பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ₹22,500 வழங்கப்படும்.
  • மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ₹8,500 வழங்கப்படும்.
  • எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு நிவாரணமாக ₹37,500 வழங்கப்படும்.
  • வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு நிவாரணமாக ₹4,000/- வழங்கப்படும்.
  • முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட) ₹50,000 வழங்கப்படும்.
  • பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ₹15,000 வழங்கப்படும்.
  • முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு ₹1,00,000 வழங்கப்படும்.
  • முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு ₹7,50,000 வழங்கப்படும்.
  • சேதமடைந்த வலைகளுக்கு ₹15,000 வழங்கப்படும்.