மேற்கு வங்காளத்தில் மம்தா தோல்வியை தழுவுவர் – ஸ்மிருதி இரானி காட்டம்!
மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வியை தழுவுவர் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதி உள்ள 5 கட்டங்களாக தேர்தல் ஏப்ரல் 10, 17, 22 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அந்த தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதனால் மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே திரிணாமுல் காங்கிரஸின் தலைவரான மம்தா பானர்ஜி, மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வரும் போது மத்திய ரிசர்வ் காவல் படையினர் இடையூறு, துன்புறுத்தல் செய்யக்கூடாது. நேர்மையான காவல் படையினரை நான் மதிப்பேன். ஆனால், மக்களை துன்புறுத்தும் பாஜக மத்திய ரிசர்வ் மதிக்க காவல் படையை மதிக்கமாட்டேன் என தெரிவித்தார்.
இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதை பற்றி அவர் பேசியது; மம்தா பானர்ஜி மேற்கு வங்காள தேர்தலில் தோல்வியைத் தழுவுவார். ஏழை மக்களுக்கு எதிராக செயல்படுகிறார். மேலும், பாதுகாப்பு படைகளுக்கு எதிராகப் பேசி உள்ளது மிகவும் கண்டிக்கதக்கது என தெரிவித்துள்ளார்.
