அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் – அசத்தும் முதல்வர்!
பஞ்சாப் மாநிலத்தில் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் சட்ட பேரவையில் ஒப்புதல் அளித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கான திட்டம் சட்டமன்ற பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் (ஏப்ரல் 1) அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியது; சட்டப்பேரவையில் பெண்களுக்கான இலவச திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்ததற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் ஏப்ரல் 1 முதல் மாநிலத்துக்குள் பெண்கள் மற்றும் மாணவிகள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
