தமிழ்நாடு

நாளை முதல் கன்னியாகுமரிக்கு செல்வோருக்கு இ- பாஸ் கட்டாயம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

நாளை முதல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்பவர்களுக்கு கட்டாயம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் நாளை முதல் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக, முக்கியமாக பின்பற்ற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்வருபவர்களுக்கு நாளை முதல் இ-பாஸ் கட்டாயம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தலம் என்பதால் வெளிமாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.