மேற்குவங்காளம் கடைசி கட்ட சட்டமன்ற தேர்தல்; 76.07 சதவீதம் வாக்கு பதிவு!
இன்று மேற்குவங்காள மாநிலத்தின் எட்டாவது மற்றும் கடைசி கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது வருகிறது . மாலை 5.32 நிலவரப்படி 76.07 சதவீதம் வாக்கு பதியாகியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொழில்களிலும் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று எட்டாவது மற்றும் கடைசி கட்ட சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அந்த தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இன்று எட்டாவதுகட்ட சட்டமன்ற தேர்தல் மேற்குவங்காளத்தின் மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்கள் அடங்கிய 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடியில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து உள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த தேர்தலில் காலை 9.30 மணி நிலவரப்படி 16.04 சதவிகிதமும், காலை 11.00 மணி நிலவரப்படி 37.80 சதவிதமும், மதியம் 1.00 மணி நிலவரப்படி 56.19 சதவிதமும், 3.37 மணி நிலவரப்படி 68.48 சதவீதமும், மாலை 5.32 மணி நிலவரப்படி 76.07 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
