அரசியல்தமிழ்நாடு

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசாவின் மனைவி மருத்துவமனையில் அனுமதி.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசாவின் மனைவி உடல்நிலையை சரியில்லாமல் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களின் உடல்நிலை பற்றி ரேலா மருத்துவமனை முதல்வர் மோகமத் ரேலாவிடம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேட்டறிந்தார். தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆ ராசா மற்றும் அவரது மனைவியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்
அவருடன் திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் உடன் சென்றனர்.