பிரதமர் நரேந்திர மோடி வரும் 9 ஆம் தேதி முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு பகுதிக்கு வருகை தர இருப்பதால் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தெப்பக்காடு பகுதியில் ஆய்வு..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இரு குட்டி யானைகளை வளர்த்து ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை சந்திக்கும் விதமாகவும் பிரதமர் நரேந்திர மோடி வரும் 9 ஆம் தேதி தெப்பக்காடு பகுதிக்கு வருகை தர இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்,
இதில் பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்கும் மசனகுடி பகுதியில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணி ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிப்பர் லாரிகளை கொண்டு நடைபெற்று வரும் பகுதியையும் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர் .

இந்த நிகழ்வில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் இணை கள இயக்குனர் வித்யா மற்றும் மாவட்ட எஸ்பி முனைவர் பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் வனத்துறையினர் வருவாய் துறையினர் ஆகியோர் ஆய்வின்போது உடன் இருந்தனர் .
