அரசியல்தமிழ்நாடு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக அமைய‌ இருக்கும் கூடுதல் கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய கனிமொழி எம்.பி

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக அமைய‌ இருக்கும் கூடுதல் கட்டிடப் பணிகளை இன்று (25/06/2023) ஞாயிற்றுக்கிழமை, அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி

இந்நிகழ்ச்சில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்