தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க எம்.பி மாரடைப்பால் உயிரிழப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க மாநிலங்களவை எம்பி முகமது ஜான் மாரடைப்பால் உயிரிழந்தார்.

2019ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு முகமது ஜான் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாலாஜா அருகே பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த முகமது ஜான் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இவருடைய மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
